புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:40 IST)

அயோத்தியில் பூஜை; அமெரிக்காவில் கொண்டாட்டம்! – ராமர் கோவில் விழா!

இன்று அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதையொட்டி அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் அயோத்தில் நடைபெறும் ராமர் கோவில் பூஜையை கொண்டாடும் விதமாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாஷிங்கடனில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தனி மனித இடைவெளியை கடைபிடித்து, காவி கொடிகளை ஏந்தியபடி சாலைகளில் மாஸ்க் அணிந்து ஊர்வலமாக சென்றுள்ளனர். நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம் ஸ்குவார் பகுதியில் ராமர் கோவில் பற்றிய விளம்பர வீடியோவும் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.