6 போர்களின் இழப்பை விட கொரோனா இழப்பு அதிகம்! அமெரிக்காவின் பரிதாப நிலை!

Last Modified புதன், 8 ஏப்ரல் 2020 (07:52 IST)

உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் முதன் முதலாக பரவிய வைரஸ் இன்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி 14 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக பாதிப்பைக் கொண்ட நாடாக உலகின் சூப்பர் பவர் என அறியப்படும் அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த பாதிப்பானது மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்நிலையில் அமரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 250 ஆண்டுகளில் அந்த நாடு சந்தித்த ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. 1775ம் ஆண்டு முதல் அமெரிக்கா ஆறு போர்களை சந்தித்துள்ளது. அமெரிக்க புரட்சி, 1812-ல் நடை பெற்ற போர், இந்திய, மெக்ஸிகோ, ஸ்பானிய அமெரிக்கா போர், வளைகுடா போர் என ஆறு போர்களை சந்தித்து உள்ளது. இந்த ஆறு போர்களிலும் சேர்த்து மொத்தமாக 9,961 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :