சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (18:59 IST)

கூகுளிலிருந்து விலகிய AI காட்ஃபாதர் ஜெப்ரி ஹிண்டன்

Geoffrey Hinton,
AI தொழில் நுட்பத்தின் பிதாமகன் எனறழைக்கப்படும் ஜெப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.

இன்றைய நவீன இணையதள உலகில் முன்னணியில் உள்ள ஏஐ தொழில் நுட்பம்,. செயற்கை நுண்ணறிவின் மூலம், இன்று தனி நபர்களுக்குத் தேவையான விவரங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

நொடியில் அனைத்து விவரங்களைப் பெறும் வசதி கொண்டுள்ள நிலையில்,  இந்த ஏஐ –ன் பிதாமகர் ஜெப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

தற்போது 75 வயதாகும் ஜெப்ரி , இவரது வாழ்வு ஏஐ  இன் வளர்ச்சி மற்றும் பயன்பாடு பற்றிய அவரது தனிப்பட்ட  நம்பிக்கைகளால் இயக்கப்படுகிறது.  இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தில் தன் வேலையை அவர் விட்டுவிட்டடதாக கூறியுளார். மேலும், பல ஆண்டுகளாக அங்குப் பணியில் இருந்த அவர், தற்போது,;;ஏஐ தொழில்  நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை கடுமையாகப்பாதிக்கும்’’ என்று எச்சரித்துள்ளார்.