1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (09:49 IST)

பள்ளியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

blast
ஆப்கானிஸ்தான் நாட்டில் அவ்வப்போது வெடிகுண்டு வெடித்து வரும் நிலையில் நேற்று திடீரென பள்ளியில் வெடித்த வெடிகுண்டு காரணமாக 16 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
ஆப்கானிஸ்தானில் நேற்று பள்ளி ஒன்றில் பயங்கர வெடிகுண்டு விபத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva