பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார் : மீண்டும் வருது ’மீடூ புயல்’
பிரபல ஹாலிவுட் நடிகரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான ஜெஃப்ரி ரஷ் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக நடிகை ஏல் ஸ்டோன் புகார் கூறியுள்ளார்.
நெட்பிளிக்ஸில் ஹிட்டான ’ஆரஞ்சு இஸ் தி நியூ பிளாக்’ எனும் தொடரில் நடித்த நடிகைதான் ஏல் ஸ்டொன். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர், ஆஸ்கார் விருது பெற்றவரும் மூத்த நடிகருமான ஜெஃப்ரி ரஷ் (67) மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏல் ஸ்டோன் கூறும் போது,கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ’தி டைரி ஆஃப் எ மேட்மேன் ’என்ற மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது உடை மாற்றும் அறையில் என் முன்பு அவர் நிர்வாணமாக ஆடினார். அநாகரிகமாக உடலோடு உரசி பேசினார். ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பினார்.என்று புகார் கூறியுள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகர் ஜெஃப்ரி ரஷ். மேலும் தன்னால் ஏல் ஸ்டோனுக்கு அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.