ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (14:28 IST)

அமெரிக்காவில் ஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்....

இந்த உலகத்தில் ஆச்சர்யத்திற்குக் கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை. அதே போல இரு ஆச்சர்யமூட்டும் சம்பவம் தற்பொது அமெரிக்காவில் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் நப்ராக்சா என்ற பகுதியில் மோனோவி எனும்  சிறிய நகரத்தில் எல்சி எய்லர்(84)என்ற மூதாட்டி மட்டுமே வசிக்கிறார். இந்த தகவல் பலருக்கும் ஆச்சர்யம் அளித்தாலும்  இதுதான் உண்மை.
இந்த அனுபவம் பற்றி எல்சி எய்லர் கூறியதாவது: நவீன காலத்தின் பரிணாமனத்தால்  இங்கிருந்த மக்கள் எல்லோரும் இடம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் எல்லோரும் வேறொரு பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆனால் நான் இங்குதான் உள்ளேன்.கடந்த 1971 ஆம் ஆண்டுமுதல் நான் இங்குதான் காபி , டீ போன்ற பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். பலரும் என் கடைக்கு தினசரி வாடிக்கயாளர்களாய் உள்ளனர். இவ்வாறு இந்த வயதிலும் தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் என்று அமெரிக்காவில் உள்ள பத்திரிக்கைகள் எல்லாம் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.