1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (14:51 IST)

வங்கதேசத்தை அடுத்து பிரிட்டனிலும் வன்முறை.. இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..!

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரிட்டனிலும் வன்முறை வெடித்துள்ளதால் பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் காரணமாக அங்கு உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த போராட்டம் ஆங்காங்கே வன்முறையாக மாறி உள்ள நிலையில் பிரிட்டன் வரும் இந்தியர்கள் மற்றும் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவசியம் இருந்தால் மட்டும் வெளியே செல்லவும் என்றும் பாதுகாப்பாக வெளியே சென்று விட்டு வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பி விடவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran