திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (09:40 IST)

லண்டனில் தொடரும் கத்துக்குத்து தாக்குதல்: இருவர் பலி!

லண்டனில் உள்ள பிரபல பாலத்தில் நடந்த கத்துக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பாலத்தில் வழக்கம்போல மக்கள் சென்றுக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது திடீரென அங்கு தோன்றிய மர்ம நபர் ஒருவர் கத்தியால் மக்களை சராமரியாக தாக்க தொடங்கினார். அவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.

இந்த சம்பவம் அறிந்து உடனடியாக லண்டன் பாலத்துக்கு விரைந்த போலீஸார் அந்த ஆசாமியை சுட்டுக் கொன்றனர். சில நாட்களில் லண்டனில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருப்பது லண்டனையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பயங்கரவாதிகளின் வேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.