வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (12:13 IST)

பயிற்சியின் போது 6வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறப்புப்படை போலீஸ்(பதற வைக்கும் வீடியோ காட்சி)

சீனாவில் சிறப்புப் படை காவல் அதிகாரி ஒருவர் பயிற்சியின் போது 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
சீனாவில் உள்ள தாய்வான் நகரில் சிறப்புப்படை காவல் அதிகாரிகள் இருவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருவரும் 6 மாடி கட்டிடத்தின் மேலிருந்து கயிற்றை பிடித்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கினர்.
 
அப்போது ஒரு காவல் அதிகாரி எதிர்பாராதவிதமாக கயிற்றை தவறவிட்டார், இதில் வேகமாக கீழே விழுந்ததில் அவரின் தலையில் பலமாக அடிப்பட்டது.
 
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கீழே விழும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருக்கிறது.
 
 

நன்றி : Daily mail