ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (11:58 IST)

உன்னை போட்டு தள்ள ஒரு ஏவுகணை போதும்! – போரிஸ் ஜான்சனை மிரட்டிய ரஷ்ய அதிபர்!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏவுகணை வீசி கொன்றுவிடுவதாக மிரட்டியதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு தேவையான பொருளாதார, ஆயுத உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. ஆனால் ரஷ்யா போர் தொடங்கும் முன்னரே அதுகுறித்த பரபரப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது பிபிசி செய்தி நிறுவனம் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய அமைதியற்ற சூழல் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இதற்காக அப்போது பிரிட்டனின் அதிபராக இருந்த போரிஸ் ஜான்சனிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், புதின் தன்னை காயப்படுத்த விரும்பவில்லை என்றும், தன்னை அழிக்க ஒரு ஏவுகணை போதும் என்றும் மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போரின்போதும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கும் ரஷ்யா மறைமுகமான எச்சரிக்கைகளை அடிக்கடி வெளியிட்டே வந்தது. இந்நிலையில் பிபிசி தயாரித்து வரும் இந்த ஆவணப்படத்தால் புதின் குறித்த பல ரகசியங்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K