திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (13:31 IST)

கொக்க கோலா கொடுத்த தந்தை: உள்ளே தூக்கி போட்ட போலீஸ்

பிரான்ஸில் தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு எந்நேரமும் கொக்கக் கோலா கொடுத்துக் கொண்டே இருந்த குற்றத்திற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். குடிகாரரான தந்தை குடும்பத்தை கவனிக்காமல் எந்நேரமும் குடித்துவிட்டு தன் குடும்பத்தாரை கொடுமை படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
 
கொடூரத்தின் உச்சமாய் தன் பிள்ளைகளுக்கு உணவளிக்காமல் அவர்களுக்கு எப்பொழுதும் கொக்க கோலா கொடுத்து வந்துள்ளார். போதிய உணவில்லாமல் அந்த பிள்ளைகள் வாடிப்போயுள்ளனர். மேலும் எந்நேரமும் கொக்க கோலா குடித்ததால் அவரின் மூத்த பையனுக்கு ஏகப்பட்ட சொத்தைப் பல். இளைய மகன் பேசுவதற்கே சிரமப்பட்டு வந்துள்ளான்.
 
இதுகுறித்து பக்கத்துவீட்டார் போலீஸில் புகார் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அந்த நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது.