1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:52 IST)

ஆஃப்ரேஷன் ஹைட்ரன்ட்: 560 பேருக்கு பாலியல் கொடுமை; கால்பந்து கிளப் அத்துமீறல்!!

பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது ஆஃப்ரேஷன் ஹைட்ரன்ட் என்று அழைக்கப்படுகிறது. 


 
 
சுமார் 311 கால்பந்து கிளப்களில் அங்கம் வகிப்பவர்கள் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட 560 நபர்களையும் போலீஸார் கண்டரிந்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். அதில், 96% பேர் ஆண்கள். இது போன்ற புகார்கள் குறித்து தெரிவிக்க சிறப்பு ஹாட்லைன் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 
 
முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்கள் இளம் பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.