வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (22:02 IST)

சீனாவில் இருந்து 5 லட்சம் கருவிகள் வந்துள்ளன – மத்திய அமைச்சகம் தகவல்

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு எடுத்துள்ளது.  இந்நிலையில் அதிவிரையில் பரிசோதனை செய்யும் வகையில் 5 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளை சீனாவில் இருது வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் கூறியுள்ளது.

சீனாவை அடுத்து அதிகம் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தற்போது வேகமாக கொரோனா வைரஸ் பரவிவருகிறது.

ஆனால், பரிசோதனை கருவிகள் போதுமானதாகவும் ,,விரைவாக பரிசோதனை  செய்யக் கூடியதாக இல்லை என பலரும் கூறிய நிலையில், இன்று,  தொண்டை மூக்கில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வு செய்யும் 33 லட்சம் ஆர் டி பி சி ஆர் கருவுகள் மற்றும் ரத்தத்தில் கொரோனா எதிர்ப்பு அணுக்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பாதிப்பை கண்டுப்பிடிக்கும் வகையில் 37 லட்சம் அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் நாட்டிற்கு விரைவில் வரவுள்ளதாக இந்திய மருத்து ஆய்வுக் கழகம் தெரிவித்திருந்த நிலையில், சீனாவில் இருந்து 5 லட்சம் பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.