1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (19:36 IST)

வியட்நாமில் 5 முறை நிலநடுக்கம்!

earthquake
வியட்நாம் நாட்டில்   மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் என்ற பகுதியில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை வியட்நாம் நாட்டில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5,  மற்றும் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவில்  5 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.