வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (09:27 IST)

கொரோனா ஊரடங்கிலும் ஓயாத மாஃபியா சண்டை! 3000 பேர் மரணம்!

கோப்புப் படம்

மெக்ஸிகோ நாட்டில் மாஃபியாக்களுக்கு இடையிலான சண்டையில் 3000 பேர் வரை ஒரு மாதத்தில் மரணமடைந்துள்ளனர்.

உலகிலேயே போதைபொருட்கள் கடத்தலில் மெக்ஸிகோ நாட்டில் மாபியா குழுக்கள் பிரசித்தி பெற்றவை. இந்த கடத்தல் குழுக்களை ஒடுக்குவதற்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ராணுவ வீரர்கள் அந்த நாட்டு அரசால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இப்போது கொரோனா காரணமாக ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாஃபியா குழுக்களுக்கு இடையிலான யுத்தம் பெரிதாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் மாபியா குழுக்கள் தங்களுக்கு இடையேய பயங்கர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில் கடந்த மாதம் மட்டும் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது அந்த நாட்டில் கொரோனாவாவால் இறந்தவர்களை விட அதிகம். இதுகுறித்து அந்நாட்டின் அதிபர் ஓப்ரடார், "நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போதும், மாபியாக்களின் செயல்கள் கவலையளிக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.