1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (14:14 IST)

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

Summer
இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரும், உலகம் முழுவதும் 1.53 லட்சம் பேரும் உயிரிழப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக அளவில் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் வெப்ப சலனம் காரணமாக ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் உயிரிழப்பது ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 1.53 லட்சம் இறப்புகளில், இந்தியாவில் அது 20 சதவீதமாக உள்ளது. வெப்ப சலன இறப்புகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவில் உயிரிழப்பு 14 சதவீதம், ரஷ்யாவில் 8 சதவீதமாக உள்ளன.

 
இந்த ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் கோடையில் 1.53 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் ஆசியாவில் இறப்பதாக மோனாஷ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.