திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (06:58 IST)

உலக கொரோனா தொற்று 3.20 கோடி: 2.36 கோடி குணமடைந்தோர்!

உலகில் கொரோனா தொற்றால் 3,20,83,282 பேர் பாதிக்கப்பட்டுளளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 981,219 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,36,57,580 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலகிலேயே அதிகபட்சமாச ஒரே நாளில் 89,688 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒரே நாளில் அமெரிக்காவில் 41,108 பேரும், பிரேசிலில் 32,445 பேரும், பிரான்சில் 13,072 பேருக்கும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலகிலேயே நேற்று அதிகபட்சமாக இந்தியாவில் 1,152 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 1,079 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், பிரேசிலில் 906 பேரும், மெக்ஸிகோவில் 651 பேரும், அர்ஜெண்டினாவில் 424 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,730,184 என்பதும் அமெரிக்காவில் 7,139,553 என்பதும், பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,27,780 என்பதும் குறிப்பிடத்தக்கது