செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:29 IST)

கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு.. ஆராய்ச்சியாளர் கூறும் காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதியில், கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இதுகுறித்து கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள டோபி இன்லெட் என்னும் பகுதியில் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாகவும், அதில்  26 திமிங்கலங்கள் கரையில் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டன என்றும் இன்னும் பல திமிங்கலங்கள்  ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு, கடலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், இதில் தன்னார்வலர்கள், கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.
 
ஒரு திமிங்கலம் கரையில் மாட்டிக்கொண்ட நிலையில், மற்ற திமிங்கலமும் வரிசையாக வந்து சிக்கியிருக்கலாம் என அந்நாட்டு, கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்கள்.
 
Edited by Mahendran