ஐரோப்பாவில் பரவும் இன்ஃபுளூவென்சா வைரஸ் நோய்.. 26 பேர் பலி

26 dead in france due to flu
Arun Prasath| Last Modified வியாழன், 6 பிப்ரவரி 2020 (13:22 IST)
கோப்புப்படம்

ஐரோப்பா கண்டத்தில் இன்ஃபுளூவென்சா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கிளம்பிய கொரோனா வைரஸ் தற்போது 20 நாடுகளுக்கும் மேல் பரவி வருகிறது. மேலும் இதனால் சீனாவில் மட்டுமே 563 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பாவில் இன்ஃபுளூவென்சா என்ற வகையான வைரஸ் நோய் ஒன்று பரவி வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இந்த வைரஸால் மட்டுமே கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 26 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கிட்டதட்ட 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அதே போல் ஐரோப்பா கண்டத்தின் செக் குடியரசில் இந்த வைரஸால் 12 பேர் பலியாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இன்ஃபுளூவென்சா வைரஸ் நோயால் 26 பேர் பலியாகியுள்ளது மேலும் பீதியை கிளப்பியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :