நடிகை சிலையை திருடிய மர்ம கும்பல் – நடிகையின் ரசிகர்கள் அதிர்ச்சி

marlin manroe
Last Modified புதன், 19 ஜூன் 2019 (17:25 IST)
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1950களில் ஹாலிவுட் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ. அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடியும், இவரும் காதலித்ததாக கூட சொல்லப்படுவது உண்டு. இவர் நடித்து 1955 ல் வெளியான படம் “செவன் இயர்ஸ் இட்ச்”. அதில் உள்ள இவரின் பிரபலமான போஸ் ஒன்றை சிலையாக வடித்தார் ஒரு கலைஞர். ஹாலிவுட் படப்பிடிப்பு பகுதிகளில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிலையை மீது மர்ம மனிதர் யாரோ நிற்பதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. உடனே போலீஸார அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். சிலை அங்கேயே இருந்திருக்கிறது. பக்கத்தில் யாரும் இல்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை அந்த இடத்தில் இருந்த சிலை காணாமல் போயிருக்கிறது.

சிலையை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். 25 வருடத்திற்கு முன்பு அந்த சிலை அங்கு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :