1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (08:13 IST)

ஒரே நாளில் 2,322 உயிரிழப்பு, 31,419 பேருக்கு பாதிப்பு: அமெரிக்காவில் கொரோனாவின் ருத்ரதாண்டவம்

ஒரே நாளில் 2,322 உயிரிழப்பு, 31,419 பேருக்கு பாதிப்பு
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வந்த போதிலும் அமெரிக்காவில் மட்டும் ருத்ரதாண்டவம் ஆகி வருகிறது என்பதை கடந்த சில நாட்களாக பார்த்தோம்
 
இந்த நிலையில் உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் அமெரிக்காவில் இன்று மட்டும் புதிதாக 31,419 பேர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,80,136ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 2322 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாகவும் கொரோனாவால் மொத்த உயிர்பலி 49,842ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 பேர்கள் 3 ஆயிரம் பேர்கள் என மிக அதிகமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்நாட்டில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டிவிட்டது உலக அளவில் மூன்றாவது நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது அமெரிக்காவை அடுத்து போரினால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகும்