வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (14:50 IST)

யூசர்களின் டேட்டா விற்பனை: டுவிட்டருக்கு 150 மில்லியன் டாலர் அபராதம்!

twitter
யூசர்களின் டேட்டாக்களை விற்பனை செய்ததாக டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ட்விட்டர் நிறுவனம் யூசர்களின் தனிப்பட்ட தகவல் மூலம் விளம்பரங்கள் மூலம் வருமான ஈட்டி வந்த்தாகவும்,அதனால் அந்நிறுவனத்தின் வருமானம் கணிசமாக அதிகரித்ததாகவும் தகவல் வெளியானது 
 
யூசர்களின் மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடியை விற்பனை செய்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு டுவிட்டர் நிறுவனம் கூறிய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை இதனை அடுத்து அந்நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மேலும் யூசர்களின் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது