சவுதியில் போராட்டம் பற்றி இணையத்தில் பேசிய இருவருக்கு சிறை

Last Modified சனி, 10 மே 2014 (12:42 IST)
சவுதி அரேபியாவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் இணையத்தில் உரையாடிய இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.

இணையதளம் ஒன்றைத் தொடங்கி சில கட்டுரைகளை வெளியிட்டமை தொடர்பில் ஒருவருக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
காட்டிஃப் பிராந்தியத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று நீதிமன்றம் விபரித்துள்ள சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் கட்டுரைகளே அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 
காட்டிஃப் பிராந்தியத்தில் இனச் சிறுபான்மையினரான ஷியா சமூகத்தினர் மேலும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மூன்றாண்டுகளாக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
 
மக்களை இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்தும் இணைய உரையாடல்களில் கலந்துகொண்டமைக்காக மற்றைய நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :