வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (13:46 IST)

ஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி !

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிலப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் விருதுகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப் படாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

90 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழாவானது வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பும் உரிமையை சில நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதற்கிடையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்வதால் சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், லைவ் ஆக்‌ஷன் குறும்படம் மற்றும் மேக்கப்& ஹேர்ஸ்டைல் ஆகிய விருதுகள் வழங்கப்படும்போது விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஆஸ்கர் கமிட்டியை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். எந்த 4 பிரிவுகளை நீங்கள் ஒதுக்கித் தள்ளியுள்ளீர்களோ அந்த 4 பிரிவுகள் இல்லாமல் உங்களால் ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து ஆஸ்கர் கமிட்டி இறங்கி வந்து தனது அறிவிப்பைத் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.