1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (22:06 IST)

காதலியை மணக்கிறார் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தனது காதலி ஹெய்லி பால்ட்வின்னை திருமணம் செய்யவுள்ளார்.
 
உலகமெங்கும் தனது பாப் இசையின் மூலம் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர் ஜஸ்டின் பீபர். இவரது பாடல்களுக்கு உலகமெங்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
 
கனடாவை சேர்ந்த இவரும் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வினும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் இவர்களின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.