1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (17:39 IST)

வாஸ்து படி எப்படி கழிவறை அமைப்பது?

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும்.

 
கழிவறை அமைக்கும் முறை:- 
 
* ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் 
 
* கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும்   
 
* கழிவறையின் தரைத்தளம், வீட்டின் தரைத்தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது 
 
* மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது.
 
-ஆண்டாள் பி.சொக்கலிங்கம்