1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (11:33 IST)

வாஸ்து : வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் முறை

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.


 

 
* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது. 
 
 * ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும். 
 
*  ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது. 
 
  * ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம். 
 
 * ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது. 
 
* ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும். 
 
 * ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) - மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும்.