செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (18:34 IST)

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு என்பதை அறிவோம்...

வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை,

 
 நான்கு திசைகள்:  
 
• வடக்கு
• கிழக்கு
• தெற்கு
• மேற்கு
 
 நான்கு மூலைகள்: 
 
 • வடகிழக்கு மூலை
• தென்கிழக்கு மூலை
• தென்மேற்கு மூலை
• வடமேற்கு மூலை 
 
வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும்(அக்னி மூலை).    
 
தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை / கன்னி மூலை) மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்கு மூலையாகும் (வாயு மூலை)     
 
இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ / தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும்.