1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் அறைகள் எந்த திசைகளில் அமைப்பது நல்லது...?

வாஸ்து சாஸ்த்திரத்தின்படி, ஒரு வீட்டின் முன்வாசல் என்பது அந்த வீட்டின் குடும்பத்தினர் உள்ளே சென்று வருவதற்கு மட்டும் கிடையாது, நல்ல எண்ணங்களை மற்றும் ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவதற்கான ஒரு வழியாகும்.

கிழக்கு - குடிநீர் ஆதாரம், தென் கிழக்கு - சமையலறை, தெற்கு - இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை, மேற்கு - சந்தததியர் படுக்கை  அறை, வடமேற்கு - டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை, வடக்கு - குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்து அமைக்கவும்.
 
வடகிழக்கு - இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும். அலுவலக அறை வடமேற்கு திசை, புத்தக அறை தென்மேற்குத் திசை, சமையல் அறை தென் கிழக்குத் திசை, உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை, படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள், பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள் குளியல் அறை கிழக்கு  திசை, சேமிப்பு அறை வடக்கு திசை, கழிவறை வட மேற்கு திசை.
 
எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை  சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் இந்த  திசைதான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு  அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.
 
கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து  நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.