இப்படியும் தீபாவளியை கொண்டாடலாம்: வைரலாகும் வீடியோ
பட்டாசு வெடிக்காமல், உங்கள் பணத்தை பாட்டாசில் வீணாக்காமல் இப்படியும் தீபாவளியை கொண்டாடலாம் என்று நடிகர் வருண் ப்ருதி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தீபாவளி நெருங்கியதை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு வாங்கி வருகின்றனர். பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. தீபாவளி என்றாலே பட்டாசு சத்தத்துடன் இருக்கும்.
இந்நிலையில் பட்டாசு வாங்குவது பணத்தை எரிப்பதற்கு சமம் என்றும், தீபாவளி என்றால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள கூடியது என்றும் கருத்து கூறும் விதமாக நடிகர் வருண் ப்ருதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுவரை இந்த வீடியோவை சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
நன்றி: Varun Pruthi