கவிஞர் வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி
சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வைரமுத்து அவர்கள் மதுரை சென்றிருந்தபோது திடீரென அவருக்கு உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனையடுத்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
வைரமுத்துவுக்கு அளிக்கபட்டு வரும் சிகிச்சை குறித்த தகவல்களுடன் கூறிய அறிக்கை இன்னும் சில நிமிடங்களில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன