1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (21:33 IST)

டாஸ்மாக் கடைகளை ஒழிக்க பொன்.ராதாகிருஷ்ணனின் ஆலோசனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அவ்வப்போது விளம்பரத்திற்காக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக்கை ஒழிக்கும் எண்ணம் ஆளும் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
 
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தால்தான் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க முடியும் என்று டாஸ்மாக்கை ஒழிக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வித்தியாசமான யோசனை ஒன்றை வழங்கியுள்ளார். தமிழகத்தில் எப்போது பாஜக ஆட்சியில் அமர்வது, எப்போது டாஸ்மாக்கை ஒழிப்பது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது
 
மேலும் ஒரே நேரத்தில் பாராளுமன்றம், சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, 'நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்தும் பட்சத்தில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பயம் காரணமாகவே மாநில கட்சிகள் எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.