வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (08:26 IST)

தேமுதிகவை கழட்டி விடுகிறதா அதிமுக?

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்தின் தேமுதிக, வெற்றி பெற்ற சில மாதங்களில்யே அதிமுகவுடனான உறவை முறித்து கொண்டது. மேலும் சட்டசபையில் நாக்கை துறுத்தி கொண்டு ஜெயலலிதா முன்னிலையிலேயே பேசியதையும் அதிமுக தலைவர்க்ள் இன்னும் மறக்கவில்லை.

இருப்பினும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முடிவு செய்த அதிமுக, ஒருவேளை பாமக, திமுக கூட்டணியில் இணைந்துவிட்டால், தேமுதிகவை இணைத்து கொள்ள முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால் தேமுதிகவை கழட்டிவிடும் நோக்கிலேயே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது

அதிமுக கூட்டணியில் தேமுதிக ஒன்பது தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதிமுக தரப்போ, நான்கு தொகுதிகள் மட்டுமே தரமுடியும் அதிலும் நாங்கள் கொடுக்கும் தொகுதியைத்தான் வாங்கி கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் இன்று பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்கும் முயற்சியில் வெற்றி கிட்டவில்லை.