திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (19:53 IST)

பாரத் பந்த்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டாரா தோனி?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக விஷத்தை விட வேகமாக ஏறிக்கொண்டிருப்பதை கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் நடைபெற்றது. சென்னையில் நேற்றைய பந்த் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் வட இந்தியா உள்பட பல இடங்களில் பந்த் வெற்றி என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன

இந்த நிலையில் நேற்று நடந்த பாரத் பந்த்தில் தோனி தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று இணையதளத்தில் பரவியது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக தோனி களமிறங்கிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில் தோனி குடும்பத்துடன் பெட்ரோல் நிலையம் ஒன்றில் உட்கார்ந்திருந்த புகைப்படம், அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம் என்றும், நேற்றைய பாரத் பந்த்தில் தோனி கலந்து கொண்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் தோனி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்பின்னரே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது