புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (15:31 IST)

பாஜக எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி - சிபிஐ அதிரடி

உத்திரபிரதேச சிறுமியை எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி என சிபிஐ தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவர் கற்பழிப்புக்கு ஆளானார். இந்த குற்ற சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
ஆனால் போலீஸார் எம்.எல்.ஏ தரப்பினருக்கே ஆதரவாக பேசிவந்தது. பாதிக்கப்பட்டதாகக் கூறிய பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பாமல், அவரது ஆடைகளையும் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தந்தை அடித்து கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கானது தற்பொழுது சிபிஐ வசம் மாறியுள்ளது. இதுகுறித்து பேசிய சிபிஐ அதிகாரிகள், போலீஸார் மற்றும் பாஜகவினர் இவ்வழக்கில் நடந்துகொண்ட விதமே அவர்கள் தான் குற்றவாளிகள் என தெளிவாக காட்டியுள்ளது என்றனர்.