ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:05 IST)

கமல் அறிமுகம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொள்கின்றனர். முதல் வாரம் போட்டியாளர்கள் அறிமுகம் மட்டும் இருந்ததால் எலிமினேஷன் இல்லை. அடுத்த வாரம் முதல் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி, இறுதியில் வெல்லும் நபர் அறிவிக்கப்படுவார். இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
1. நடிகை யாஷிகா ஆனந்த்: 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட நடிகை
 
2. நடிகர் பொன்னம்பலம்: வில்லன் மற்றும் ஸ்டண்ட் நடிகர்
 
3. நடிகர் மகத்: மங்காத்தா உள்பட பல படங்களில் நடித்தவர்
 
4. நடிகர் டேனி: 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்த காமெடி நடிகர்
5. வைஷ்ணவி: மறைந்த எழுத்தாளர் சாவியின் பேத்தி
 
6. நடிகை ஜனனி ஐயர்: 'அவன் இவன்' பட நாயகிகளில் ஒருவர்
 
7. அனந்த் வைத்தியநாதன்: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்தவர்
 
8. பாடகி ரம்யா: நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர்களின் பேத்தி
9. நடிகர் செண்ட்ராயன்: காமெடி நடிகர்
 
10. நடிகை ரித்விகா: ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்', மற்றும் 'கபாலி' படங்களில் நடித்தவர்
 
11. நடிகை மும்தாஜ்: டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த கவர்ச்சி நடிகை
 
12. தாடி பாலாஜி: காமெடி நடிகர்
 
13. மமதி: 'வாணி ராணி' சீரியலில் நடித்தவர் மற்றும் பாடகி
 
14. நித்யா: தாடி பாலாஜியின் மனைவி
 
15. ஹாரிக் ஹாசன்:
நடிகர் ரியாஸ்கான் - உமா ரியாஸ்கான் தம்பதியின் மகன்
 
16. ஐஸ்வர்யா தத்தா: 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நடித்தவர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் 17வது நபராக நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இருப்பினும் இவர் போட்டியாளர் இல்லை என்பதும் ஓரிரு நாட்கள் மட்டும் தங்கும் சிறப்பு விருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.