கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2; டீசர் இன்று ஒளிபரப்பு
பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின், இரண்டாவது சீசன் விரைவில் துவங்கயுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இரண்டாவது சீசனுக்கான டீசர் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஆரவ், ஜுலி என பலர் பிரபலம் ஆனார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனே இதனை தொகுத்து வழங்க உள்ளார். கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சியின் டீசருக்கான படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடந்தது.
ஜுன் 25 முதல் செப்டம்பர் 30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு. இன்னும் சில மணி நேரங்களில் கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவிருக்கிறார். இரண்டாவது சீசனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாக கூறப்படுகிறது.