1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: திங்கள், 28 மார்ச் 2016 (13:54 IST)

‘அண்ணே அதாண்ணே இது’ : வைகோவை கலாய்த்து உதயநிதி போட்ட வைரல் மீம்ஸ்

மதிமுக பொருளாலரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவை கிண்டல் செய்து, திமுக பொருளாலர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மீம்ஸ் போட்டுள்ளார்.


 

 
திமுகவுக்கும் வைகோவிற்கும் இடையேதான், தற்போது அனல் பறக்கும் கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. காரணம், விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக தரப்பு ரூ.500 கோடி பேரம் பேசியதாக வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
இதற்கு திமுக தரப்பு பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வைகோ கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக சார்பில் வைகோவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, அதிமுகவின் பினாமிதான் மக்கள் நலக் கூட்டணி செயல்படுகிறது ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை வைகோ மறுத்துவருகிறார்.
 
இந்நிலையில், நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வைகோவை கிண்டலடித்து ’அண்னே அதாண்னே இது’ என்ற தலைப்பில் மீம்ஸ் போட்டுள்ளார். அதில், வைகோ ஜெயலலிதா போலவும், ஜெயலலிதா வைகோ போலவும் உடையணிந்து இருப்பது போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த மீம்ஸ் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.