செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. திரையரங்கு-திரைப்படம்
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (09:33 IST)

முன்பதிவே இத்தனை கோடியா...? வசூலில் சகலகலா வேட்டையாடும் வலிமை!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாளில் திருவிழா கோலமாக திரையரங்குக்குள் களைகட்டும். 
 
இந்நிலையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு மட்டுமே சுமார் ரூ 20 கோடிகள் வரை நடந்திருக்கும் என கூறப்படுகிறது.
 
அது மட்டுமல்லாது உலகம் முழுவதும் சுமார் 2000 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஆகா இந்த வாரம் இறுதிக்குள் படத்தின் வசூல் விவரம் அமோகமாக இருக்கும் என கணிக்க முடிகிறது. இது அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே கொண்டுச்சென்றுள்ளது.