வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (14:44 IST)

காதலனை கைபிடித்த ’சரவணன் மீனாட்சி’ மைனா – இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படம் !

சரவணன் மீனாட்சி மற்றும் சில தமிழ் சினிமாக்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை நந்தினி தனது காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. நல்ல நடிப்பு திறமை இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரவில்லை. அதனால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மைனா என்ற கிராமத்து வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்த பின் தனக்கென தனியாக ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆகி கொஞ்ச நாளிலேயே கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திய நந்தினி தற்போது சக நடிகரரான யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவன. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.