திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழ்நாடு பட்ஜெட் 2016 -17
Written By Dinesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (13:18 IST)

புத்தகங்கள் முதல் மிதிவண்டி வரை இலவசம்: ரூ.2,705 கோடி ஒதுக்கீடு

புத்தகங்கள் முதல் மிதிவண்டி வரை இலவசம்: ரூ.2,705 கோடி ஒதுக்கீடு

2016-2017 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்குதலில் பள்ளிமாணவர்களுக்கு புத்தகங்கள் முதல் மிதிவண்டி வரையிலான இலவச திட்டங்களுக்கு  ரூ.2,705 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 
அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2016-2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்து வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், தற்போது ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்து கொண்டிருக்கிறார். 2016-2017 நிதியாண்டுக்கான பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி. அதில், பள்ளிமாணவர்களுக்கு புத்தகங்கள் முதல் மிதிவண்டி வரையிலான இலவச திட்டங்களுக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.