ஓட்டுக்கு ஒழுங்க காசு கொடுக்கல... சாலை மறியலில் பொது மக்கள்!
அதிமுகவினர் முறையாக பணப் பட்டுவாடா செய்யவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அரசியல் கட்சியினரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பாக வரும் புகார்களின் மீது பறக்கும் படையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முறையாக பணப்பட்டுவாடா நடைபெறவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம், ராசிபுரம் தொகுதியில் அதிமுகவினர் முறையாக பணப் பட்டுவாடா செய்யவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.