ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (14:49 IST)

அதிரடி ஆக்‌ஷன் களத்தில் இறங்கி மிரட்டும் விவேக்! வேறலெவல் ‘வெள்ளைப்பூக்கள்’ டிரைலர்!

நடிகர் விவேக் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் "வெள்ளைப்பூக்கள்" ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

 
காமெடி நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது.  இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
 
சமீபத்தில் இப்படத்தின் படத்தின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளைப்பூக்கள் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக  வெள்ளைப்பூக்கள் படத்தில் ரிட்டையர் போலீஸாக  விவேக் நடித்துள்ளார்.
 
இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கம் இப்படத்தில் விவேக், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  அதிரடி  போலீஸ் அதிகாரியாக விவேக் நடிக்கும் இப்படம் அமெரிக்காவில் நடக்கும் கடத்தல் தொடர்பான வழக்கை பற்றியும் , அங்கு நடக்கும் மிரட்டல் சம்பவதையும் உள்ளடக்கி உருவாகியுள்ளது.