ஜாலி "ட்ரிப்" அடித்து உயிரை பனையவைத்த சுனைனா - பயங்கரமான ட்ரைலர்!
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திரில்லர் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வரும் ட்ரிப் படத்தில் யோகிபாபு ,மொட்ட ராஜேந்திரன், கருணாகரண் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. ஜாலி ட்ரிப் அடித்து அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் சோம்பிகளிடம் இருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதை திரில்லிங்காக உருவாக்கியுள்ளனர். பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வீடியோ இதோ...