புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (14:39 IST)

எதுவுமே முடிவில்லை.... திருப்பி அடிப்போம்... "நாடோடிகள் 2" ட்ரைலர்!

சமூகத்தின் அவலங்களை சித்தரித்து கதை அமைத்து சிறந்த தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவரது இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது. 
 
அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 ஆண்டு மார்ச் மாதம்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  முதல் பாகத்தின் வெற்றி கூட்டணியான சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்த படத்தில் தொடர்கிறது. அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாடோடிகள் 2 படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. சாதி பாகுபாடுகளை எதிர்த்து போராடி மாற்றத்தை கொண்டு வரும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த வாரம், ஜனவரி 31 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.