புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (22:07 IST)

மரண பயத்தில் கதறும் கவின்... மிரட்டியெடுத்த லிப்ட் ட்ரைலர்!

விஜய் டிவியின் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர் கவின். முன்னதாகவே அவர் திரைத்துறையில் இருந்து வரும் கவின் படங்கள் சிலவற்றிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
அந்த வகையில் தற்போது கவின் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் “லிஃப்ட்”. ஒரு த்ரில்லர் கதையான இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தை புதிய இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் 1 அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. 
 
இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கவின் இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு லிப்ட்டில் வரும்போது மர்ம பேய் ஒன்றிடம் மாட்டிக்கொள்கிறார். அங்கிருந்த கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டும் யாரும் முன்வரவில்லை அந்த லிப்ட்டில் என்ன சம்பவம் நடந்துள்ளது என்பதை த்ரில்லர் ஜானரில் படம் எடுத்துள்ளனர்.  மிரட்டும் அந்த ட்ரைலர் இதோ...