பேரு தான் "காவல்துறை உங்கள் நண்பன்" ஆனால்.... ட்ரைலர் பாருங்க உங்களுக்கே புரியும்!

papikhsa| Last Modified வியாழன், 12 மார்ச் 2020 (18:54 IST)

ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில்
சுரேஷ் ரவி - ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும்
படம் “காவல் துறை உங்கள் நண்பன்”. முக்கிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மைம்கோபி நடித்துள்ள இப்படத்திற்கு ஆதித்யா, சூர்யா இணைந்து இசை அமைத்துள்ளனர்


ஒயிட் மூன் புரொடக்ஷன் சார்பில் பாஸ்கரன், ராஜ பாண்டியன், சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் வெளியிடுகிறது. மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படத்திற்கு விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் யூடியூபில் வெளியாகி பாசிடீவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. சாதாரண பணமில்லாத மக்கள் பிரச்சனை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றால்... அவர்களை அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் செய்யும் கொடுமைகளை எதார்த்தமான படம்பிடித்து காட்டியுள்ள இப்படம் நிச்சயம் வெற்றியடைந்து பல விருதுகளை குவிக்கும் என நம்பப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :