'டம்மி டப்பாசு' படத்தின் டிரெய்லர்
சென்னையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு குண்டுப் பையனின் காதலையும் வாழ்க்கையையும் காட்டும் படம். குண்டுப் பையனாக மலையாள நகைச்சுவை நடிகர் பிரவீன் பிரேம் நடிக்கிறார். அவர் அங்கே பிஸியான நடிகராக இருந்தபோதிலும் இந்தக் கதை பிடித்துப் போகவே, இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் என்பவர் நடித்துள்ளார். இவர், நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள்.
படத்தில் வன்முறைக் காட்சிகள் துளியும் கிடையாது. சண்டை நடிகர்களைக் கூட, காமெடியன்களாக மாற்றி நடிக்க வைத்துள்ளோம் என்கிறார் இயக்குநர் ஓ.எஸ்.ரவி. தேவா இசையில், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் விரைவில் திரைக்கு வரவுள்ள டம்மி டப்பாசு படத்தின் டிரெய்லர் இங்கே.