1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (18:59 IST)

எனக்கான விடுதலையை நானே போராடி வாங்கணும்: தமிழ்க்குடிமகன் டிரைலர்

tamilkudimagan
எனக்கான விடுதலையை நானே போராடி வாங்கணும்: தமிழ்க்குடிமகன் டிரைலர்
எனக்கான விடுதலையின் நானே போராடி வாங்கணும் என்ற சேரனின் வசனத்துடன் கூடிய தமிழ் குடிமகன் என்ற படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளன 
 
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்குடிமகன். 
 
சேரன் மற்றும் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் கீழ் சாதியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது 
 
சேரனின் வழக்கமான இயல்பான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
Edited by Siva