வலிமை படத்துக்கு ஜிப்ரானின் பின்னணி இசை சூப்பர்… பாராட்டிய யுவன்!
வலிமை படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பின்னணி இசை பணிகளை ஜிப்ரான் மேற்கொண்டார்.
அஜித் நடித்த வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன.இந்த நிலையில் திடீரென வலிமை படத்தின் பின்னணி இசைக்கு யுவனுக்கு பதிலாக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று யுவன் படத்திற்கு சிறப்பாக பின்னணி இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் பாடல்கள் மற்றும் தன்னுடைய விசில் தீம் இசையைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.